தந்தை - மாமனாரின் தவறான செயலால் சிறுமி வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (14.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நீதவான் உத்தரவு
குறித்த சிறுமியின் தாயார் கடந்த 3 மாத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், தந்தையாருடன் வாழ்ந்துள்ளார்.
இந்த நிலையில், 49 வயதுடைய தந்தையாரும் 52 வயதுடைய சிறுமியின் மாமனாரும் இணைந்து கூட்டாக சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
சம்பவ தினமான நேற்றைய தினம் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |