கஞ்சி கொடுத்து நகைகளை திருடும் பெண் : பொது மக்களுக்கு எச்சரிக்கை
கண்டியில் இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சி குடித்தவுடன் தாங்கள் மயங்கிவிட்டதாகவும் எழுந்து பார்க்கும் போது தமது நகைகளை காணவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரை பார்ப்பதற்காக வந்த பெண், நோயாளிகளை பார்க்க அனுமதிக்கும் நேரம் வரும் வரை அருகில் இருந்த கதிரையில் அமர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயக்கமடைந்த பெண்
இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணிடம் பேசி நட்பாகி கொண்டு வந்த கஞ்சியை குடிக்க கொடுத்துள்ளார்.

அதனை குடித்துவிட்டு மயங்கி விழுந்த பெண் சுயநினைவிற்கு திரும்பிய போது, தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதை கவனித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam