காதலனுடன் சகோதரியை அழைத்து சென்ற காதலி பலி
கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் வாரியகொட பகுதியில் இராணுவ கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பலத்த காயங்களுடன் வாரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அலவ்வ பகுதியை சேர்ந்த இஷாரா தேவிந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவி பலி
விபத்து நடந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்துள்ளனர். நடுவில் இருந்த மாணவி விபத்தில் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.
அலவ்வவிலிருந்து வரகாபொல நோக்கிச் சென்ற இராணுவ கெப் வண்டி, வரகாபொலவிலிருந்து அலவ்வ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
வண்டியை ஓட்டி வந்த இராணுவ கோப்ரலும் காயமடைந்த நிலையில் வரகாபொல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம்
உயிரிழந்த மாணவி தனது காதலனுடன் திருமணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், வழியில் தனது சகோதரனையும் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு ஏற்பட்ட நித்திரையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் உடல் வரகாபொல ஆதார மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
