ஏமாற்றிய காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த இராணுவ சிப்பாய்
பல்லேகலை முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தனது முன்னாள் காதலியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளங்களில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீண்டகாலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதன் காரணமாகவே அவரது நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 24 வயதுடைய மாத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கணினி குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணை மேற்கொண்ட போது சந்தேக நபர் கண்டி பல்லேகலை படை முகாமில் கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி கணினி குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
