பாறையில் இருந்து விழுந்த யுவதி மரணம்
கேகாலை மாவட்டம் மானெல்லை உத்துவன்கந்த சரதியல் பாறையில் இருந்து கீழே விழுந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.
கமத்தொழில் ஆலோசகராக பணிப்புரிந்த யுவதி
பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று உதவி கமத்தொழில் ஆலோசகராக சேவையாற்றி வந்த 27 வயதான விரஷ்மி கொடித்துவக்கு என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை சேர்ந்த 58 மாணவர்களை கொண்டு குழு இன்று மதியம் விநோத சுற்றுலாப் பயணமாக உத்துவன்கந்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
மலையேறும் போது வழுக்கி விழுந்த யுவதி
அப்போது மலையேறிக்கொண்டிருந்த போது கால் வழுக்கி யுவதி கீழே விழுந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த யுவதி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
