மூங்கிலாறு சிறுமி மரணம்! : நீதிமன்றம் பிறபித்த உத்தரவு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட உறவு முறையான சிறுமியின் அத்தான் எதிர்வரும் 04.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மூங்கிலாற்றில் சிறுமி உயிரிழப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை 19.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தி 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமையினை தொடர்ந்து மன்று அதற்கான உத்தரவினை வழங்கியுள்ளது.
இந் நிலையில் கடந்த 20.12.21 அன்று உயிரிழந்த சிறுமியின் தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகியோர் பொலிஸாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் இருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சிறுமியின் உயிரிழப்பு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மூங்கிலாறு சிறுமி மரணம்! திடுக்கிடும் தகவல் வெளியானது(Video)



