அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீட்டில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
கம்பஹா பகுதியில் ஆளும் தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து 17 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா - மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமியொருவர் கம்பஹா நைய்வல வீதி - உடுகம்பளை பகுதியிலுள்ள அரசியல்வாதியின் உறவினர் வீட்டிற்கு வீட்டுக்கு தொழிலுக்காக அண்மையில் சென்றுள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு
இதன்போது குறித்த வீட்டில் சிறுமி சுத்தப்படுத்தல் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன், நீச்சல் தடாகத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீச்சல் தடாகத்தினை சுத்தப்படுத்த இறங்கிய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சீ.சீ.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
இதற்கமைய, சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்றைய தினம் கம்பஹா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறுமி நீச்சல் தடாகத்தில் உள்ள நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பஹா மற்றும் மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.