மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் காரணமாக போக்குவரத்து தடை விதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட நல்லதண்ணீர் பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று வாழமலை தோட்டத்தில் பாரிய வெடிப்புக்கள், தாழிறக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து குறித்த வீதியினூடான பொது போக்குவரத்திற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நல்லதண்ணீர் பொலிஸ் நிலைய பொலிஸ் பிரதான பரிசோதகர் சாந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.
மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புக்கள்
குறித்த வீதியில் மேல் பகுதியில் வாழைதோட்டத்தில் சுமார் 100 மீட்டர் தூரம் வரை நான்கு அங்குல அகலத்திற்கு பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்டச் செயலாளருக்கு அறிவித்ததற்கமைய நுவரெலியா இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் கட்டட ஆராச்சி நிலையம் ஆகியன வந்து ஆய்வு செய்யும் வரை மஸ்கெலியா ஸ்ரீபாத நல்லதண்ணீர் வீதி மூடப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு விடுத்துள்ள அறிவுருதல்கள்
குறித்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் அபிவிருத்தி செய்வதற்காக மலைப்பிரதேசங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன் இந்த வெட்டப்பட்ட மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் பல தடைவைகள் மண்சரிவு ஏற்பட்டு பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெடிப்புக்கள் தொடர்பில் நுவரெலியா கட்டட ஆய்வு
நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.