மூன்று வங்கிக் கணக்குகளில் 3 கோடி ரூபா பணம் வைத்திருந்த பெண் கைது
ஒரு வருடத்தில் சுமார் மூன்று கோடி ரூபா பணத்தை மூன்று வங்கிக் கணக்குகளில் கையாண்டு வந்த பெண்ணொருவரை சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கம்பஹா - களனிமுல்ல பிரதேசத்தில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
“குடு ஆஷா” என அழைக்கப்படும் இந்த சந்தேகநபரான பெண், அங்கொட லொக்கா என்பவரின் சகாவான சமியா என்ற நபரின் சட்டரீதியற்ற மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் தான் வைத்திருந்த பணத்தின் மூலம் மல்வத்தை ஹிறிப்பிட்டி பிரதேசத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் வர்த்தக நிலையங்களை கொள்வனவு செய்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சம்பாதித்த பணத்தை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்து வந்துள்ளார்.
2019, 2020 ஆண்டுகளில் இந்த வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றப்பட்டு வந்துள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.