14 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கடுமையான உத்தரவு
வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (25) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த (17.05.2017) அன்று வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை தாயின் சகோதரர் (மாமா) மது போதையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதன் பின்னர் தான் கற்பமாகி கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் மன்றில் குறித்த சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.
இச் சாட்சியத்தை ஒப்புதல் அளிக்கும் விதமாக வைத்திய கலாநிதி ஒருவரும் மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
குறித்த குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபா நஷ்டஈடும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும்10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
