இலங்கை தமிழ் பெண்ணுக்கு அதிஷ்டம் - வெளிநாட்டில் கிடைத்த கோடிக்கணக்கான பணம்
கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதியாகக் காலத்தைக் கழித்த பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபாய் ரூபா பரிசாக வென்றுள்ளார்.
லொத்தர் சீட்டில் வெற்றி
தமிழ்நாட்டில் இருந்த அவர், திருமணத்திற்குப் பிறகு, அபுதாபியில் வேலைக்குச் சென்றார். அங்கு வாங்கிய லொத்தர்சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி திர்ஹம் (9,82,52,277.32 ரூபாய்) கிடைத்துள்ளது.
80 லொத்தர் சீட்டுகளை வாங்கிய அருள்சேகரம் செல்வராணி என்ற பெண் விடுமுறைக்காக தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளார்.
அவரது லொத்தர் பரிசு தொடர்பில் குறித்த லொத்தர் நிறுவனமே தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
