வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் நடந்த பேய் திருமணம்
மலேசியாவில்(Malaysia) திருமண பந்தத்தில் இணைய தயாராகிய நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மலேசியாவில் வசித்து வந்த ஜிங்ஷன் என்ற இளைஞன் லீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் ஜூன் 2 ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த காதல் ஜோடி
எனினும், துரதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அந்த காதல் ஜோடி ஒரு கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனால், இரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையடைந்த நிலையில், அவர்களது உயிர் மண்ணை விட்டு போனாலும் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
அந்தவகையில், அவர்கள் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதன்படி, ஒரு மண்டபத்தில் இறந்த காதல் ஜோடியின் புகைப்படம் மற்றும் அவர்கள் போன்ற உருவ பொம்மையை வைத்து பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த பேய் திருமணத்தால் உயிரிழந்த காதல் ஜோடி ஒன்றிணைவர் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மேலும்,இந்த விநோத திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri