ஒரு வேளை உணவை பெறுவதே பெரும் சாதனை: தாயொருவரின் ஏக்கம்(Video)
கணவனை இழந்த பெண்கள் இந்த சமூகத்தில் பல சவால்களை அனுபவிக்கிறார்கள். கணவனை இழந்த பின் குடும்பத்தின் முழு பொறுப்பையும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வவுணதீவு நாவற்காடு பிரதேசத்திலுள்ள கணவனை இழந்த பெண்ணொருவர் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.
தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக, வயலுக்கு சென்று கூலி வேலை செய்து அதில்வரும் பணத்தில் பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார்.
கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக கூலி வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
4 பிள்ளைகளில் இருவர் போசாக்கு குறைப்பாட்டால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இளைய மகனின் உழைப்பை நம்பி பாதி நாட்கள் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதுவரை எவரும் உதவி செய்யவில்லை, சமுர்த்தியால் வழங்கப்படும் 2000 ரூபா உதவி பணம் மாத்திரம் பெற்று வருகின்றனர்.



