பயங்கரவாதியுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்: விடுக்கப்படும் எச்சரிக்கை - இப்படிக்கு உலகம்
ஈராக்கிய நாட்டவரும் ஐ.எஸ் ஆதரவாளருமான நபர் ஒருவருக்கு சுவிஸ் நிர்வாகம் புகலிடம் அளிக்க முடிவு செய்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்காவ் மண்டலத்தில் வசித்து வந்த 37 வயதான ஈராக்கிய நாட்டவர் வெசாம் தீவிர ஐ.எஸ் ஆதரவாளராகவும், தமது பேஸ்புக் பக்கத்தில், ஐ.எஸ் ஆதரவு கருத்துகள் கொண்ட காணொளிகளை வெளியிட்டும் வந்துள்ளார்.
தற்போது செயின்ட் கேலனில் உள்ள பெடரல் நிர்வாக நீதிமன்றம், வெசாமின் புகலிடக் கோரிக்கையை ஏற்பதாகவும், அவர் இனி சுவிட்சர்லாந்தில் வாழலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், எஸ்.வி.பி தேசிய கவுன்சிலர் Roland Rino Büchel இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சுவிஸ் மக்கள் இனி ஒரு தீவிரவாதியுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
