ரஷ்ய ஆயுத உற்பத்தி தொடர்பில் ஜேர்மன் விடுத்துள்ள எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒருவருடத்தில் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை, ரஷ்யா (Russia) வெறும் மூன்று மாதங்களில் உருவாக்கி வருகிறது என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
1000 நாட்களைக் கடந்து இடம்பெற்று வரும் உக்ரைன் போரின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக போர் பொருளாதாரமாக மாற்றி, ஆயுத உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும், இது உண்மையில் மேற்கு நாடுகளுக்குத் தீராத சவாலாக உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் பொருளாதாரம்
தற்போது, ஜேர்மனியின் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாகவும், ரஷ்யாவின் பெருத்த ஆயுத உற்பத்தியை சமாளிக்க ஜேர்மனியின் போர் திறனையும் பாதுகாப்பு முதலீட்டையும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜேர்மனி, புதிய பாதுகாப்பு தொழில்துறை மூலோபாயத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில் அதில், ஆயுத உற்பத்தியை மேம்படுத்த மற்றும் நடைமுறைகளை சுலபமாக்குவதற்கான பல முயற்சிகளை உள்ளடங்கும்.
மேலும், ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி வேகமும், அதன் போர் பொருளாதார தகுதியும் மேற்கு நாடுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி வருகின்றன.
இந்நிலையில், ஜேர்மனியின் இந்நடவடிக்கை, நவீன ஆயுத உற்பத்தியில் எதிர்மறை பாதிப்புகளை சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதா சர்வதேச தரப்புக்கள் தெரிவி்கின்றன.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam