ஜெர்மனி பொருளாதார சீர்திருத்தம்: நடுத்தர மக்களுக்கு வரி விலக்கு
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியை மந்தநிலையிலிருந்து மீட்டெடுக்கவும், தீவிர வலதுசாரி கட்சிகளின் அரசியல் எழுச்சியை எதிர்கொள்ளவும் அந்த நாட்டு ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணி அரசு அதிரடியான பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்களை அறிவித்துள்ளது.
‘மீட்டெடுப்பு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் யூரோ அளவிலான வருமான வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இந்த வரி இழப்பை ஈடுகட்ட, நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கப்படும் என்று நிதி அமைச்சர் லார்ஸ் கிளிங்பெய்ல் தெரிவித்துள்ளார்.
இந்த சீர்திருத்தம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அரசு நம்புகிறது.

இவற்றுடன், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், ஊழியர்களின் விடுப்பு முறைகளை முறைப்படுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஊழியர்கள் தொலைபேசி மூலம் மருத்துவச் சான்றிதழ் பெற்று விடுப்பு எடுக்கும் முறை இரத்து செய்யப்படுவதுடன், உடல்நலக்குறைவு ஏற்பட்ட முதல் நாளிலிருந்தே மருத்துவரின் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய முறை
மேலும், அரசுத் துறைகளில் உள்ள தேவையற்ற நிர்வாகக் கெடுபிடிகள் குறைக்கப்பட்டு வணிக நடைமுறைகள் எளிமையாக்கப்படவுள்ளன.

அதேவேளையில், நாட்டின் ஓய்வூதிய முறையைச் சீரமைக்கும் நோக்கில், மக்களின் சராசரி ஆயுட்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஓய்வு பெறும் வயதை 67இல் இலிருந்து படிப்படியாக உயர்த்தவும் இந்தக் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
ஜெர்மனியில் கடந்த சில தசாப்தங்களில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை இதுவென பொருளாதார வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri