பிரித்தானியாவை கோவிட் வைரஸின் ஆபத்தான பகுதியாக வகைப்படுத்திய ஜேர்மனி
ஜேர்மனிய சுகாதார முகவர் நிறுவனம் பிரித்தானியாவை கோவிட் வைரஸின் ஆபத்தான பகுதியாக வகைப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உருமாறிய கோவிட் வைரஸ் திரிபு பரவி வருவதை கவனத்தில் கொண்டு இந்த வகைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் புதுப்பிக்கப்பட்ட விதிகளின் கீழ் தனிமைப்படுத்தலை தவிர்க்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் ரொபர்ட் கோச் நிறுவனம் பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதி குறைந்தளவான ஆபத்துள்ள பகுதிகளாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் B.1.617.2 என்ற உருமாறிய வைரஸ் குறைந்தளவிலான விதத்திலேயே பரவி வருகிறது. இந்தியாவில் கண்டறிப்ப்ட இந்த வைரஸ் திரிபு ஏனைய திரிபுகளை விட வேகமாக பரவக் கூடியது என நம்பபடுகிறது.
இங்கிலாந்தின் சில பகுதிகளில் இந்த உருமாறிய வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் இன்று கூறியுள்ளது.
கடந்த வாரம் 520 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இந்த வாரம் ஆயிரத்து 313 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜேர்மனி இந்த வாரம் ஆபத்தான பிரதேசங்களில் இருந்து வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை தளர்த்தியது. பரிசோதனைகளில் கோவிட் தொற்று இல்லாதவர்களுக்கு தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டது.
இவர்கள் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பீ.சீ. ஆர் பரிசோதனைகளில் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் என நிரூபிக்கக் கூடியவர்கள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை எனவும் ஜேர்மனி அறிவித்துள்ளது.
கோவிட் பரவும் ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இணையம் வழியாக ஜேர்மன் அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ஜேர்மனிக்குள் வருவதற்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் தமக்கு கோவிட் தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.