இலங்கையில் ஜெர்மன் நாட்டவருக்கு நேர்ந்த கதி
ஸ்ரீ பாத யாத்திரைக்கு வருகை தந்திருந்த ஜெர்மன் நாட்டவரும் ஐந்து இலங்கையர்களும் இன்று(21) குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக நல்லதன்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
83 வயதான ஜெர்மன் நாட்டவர் வஸ்கடுவவில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஹட்டன் வீதியில் ஸ்ரீ பாத பயணித்துக் கொண்டிருந்தபோது, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொலுதென்ன பகுதியில் குளவித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை
குளவித் தாக்குதலால் காயமடைந்த வெளிநாட்டவர் உட்பட ஆறு பேர் ரது அம்பலமா பகுதியில் கடமையில் இருந்த பொலிஸாரால் நல்லதன்னியவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 1990 சுவசெரிய அம்பிலன்ஸில் மஸ்கெலிய பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மிகவும் வறண்ட வானிலை காரணமாக மரங்களில் கட்டப்பட்ட குளவி கூடுகளை பருந்துகள் தாக்குவதால் குளவிகள் இவ்வாறு தாக்கத் தூண்டப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri