ஜேர்மனியில் இலங்கை பெண்களுக்கு தொழில்வாய்ப்பு:ஜேர்மன் குழு இலங்கை வருகை
இலங்கையில் தற்போது இயங்கி வரும் ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியைப் போன்ற ஒரு அதிநவீன தொழில்நுட்பக் கல்லூரியை நிறுவுவது குறித்து ஆராய்வதற்காக ஜேர்மன் முதலீட்டாளர்கள் குழு ஒன்று வந்துள்ளது.
ஒரு புதிய தொழில்நுட்பக் கல்லூரிக்கான திட்டங்களுக்கு மேலதிகமாக, ஜேர்மனியில் தாதியர்களாக வேலை செய்வதற்கு இலங்கைப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் இந்தக் குழு ஆராயவுள்ளது.
ஜேர்மனியில் வழங்கப்படும் தொழில்கள்
ஜேர்மனியின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பதால், பராமரிப்பாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை தாதியர்களுக்கு சுமார் 2,000 யூரோக்கள் மாத சம்பளமாகப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இலங்கையில் 700,000 ரூபா மதிப்பை கொண்டுள்ளது . ஜனாதிபதியின் சமீபத்திய ஜேர்மனுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது முன்மொழியப்பட்ட முதலீடு குறித்த ஆரம்ப பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இவர்கள் வந்துள்ளளர்.

பேராசிரியர் தாமஸ் ஹோல்ட்னர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட ஜேர்மன் முதலீட்டுக் குழு, இலங்கையில் 14 நாட்கள் தங்கி கூட்டங்களை நடத்தவும், திட்ட சாத்தியக்கூறுகளை மதிப்பிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri