இலங்கை மக்களின் அமைதியான போராட்டம் ஜேர்மன் மக்களை நினைவுபடுத்துகிறது: ஹோல்கர் சீபர்ட் (Photos)
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் அமைதியான தன்மையில் தாம் ஈர்க்கப்படுவதாக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சீபர்ட் (Holger Seubert) தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"இலங்கையின் பெருமைமிக்க மக்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வளவு அமைதியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நான் ஈர்க்கப்பட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
1989 இல் ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்ததை அது நினைவுபடுத்துகிறது என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வலிமை பெற வாழ்த்துவதாகவும் தமது பதிவில் தெரிவித்துள்ளார்."
I am impressed with how peaceful the proud people of ?? are exercising their right to freedom of expression. It reminds me of German reunification back in 1989 when we experienced how powerful peaceful protests can be. Wishing all parties involved the strength to remain peaceful! pic.twitter.com/xKH79QCx9A
— Ambassador Holger Seubert (@GermanAmbColo) April 24, 2022



