புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள்

Sri Lanka United States of America World
By T.Thibaharan Jun 24, 2025 11:56 PM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

பூமிப்பந்தில் மனித குலம் எப்போது அரசமைத்து வாழத் தொடங்கியதோ அன்றே நிலத்திற்கான யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.

ஆயினும் அரசுகள் என்ற அடிப்படையில் ஒரு அரசு இன்னொரு அரசு அரசின் மீதான யுத்தம் என்பது இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னர் பாரசீகத்தில் இருந்து கிரேக்கம் நோக்கிய படையெடுப்புத்தான் உலகின் முதலாவது புவிசார் அரசியல் யுத்தமாக(Geopolitical war) கருதப்படுகிறது.

அன்றிலிருந்து இந்த நிமிடம் வரைக்கும் நிலத்தின் மீதான ஆளுகைக்கான யுத்தம் தொடர்கிறது. நிலத்தின் மீதான ஆளுகையை உறுதிப்படுத்தற்காக நில எல்லைக்கு வெளியேயும் நடாத்தப்படுகின்ற யுத்தத்தினை புவிசார் அரசியல் யுத்தம் என்கிறோம்.

இன்று உரைனிலும், மத்திய கிழக்கிலும் நடக்கின்ற யுத்தங்கள் புவிசார் அரசியல் யுத்தமே. இந்த புவிசார் அரசியல் யுத்தங்கள் உலகின் தலைவிதியை மாற்றி அமைக்க வல்லன. எனவே அடிப்படையில் இந்த புவிசார் அரசியல் யுத்தம் பற்றிய ஒரு விரிந்த பார்வை நமக்குத் தேவையாக உள்ளது.

லண்டனில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம்: பயணிகளுக்கு உடல்நலக் குறைபாடு

லண்டனில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம்: பயணிகளுக்கு உடல்நலக் குறைபாடு

புவிசார் அரசியல் என்றால் என்ன?

இந்தப் பூமிப் பந்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் தமது வாழ்வுக்காக இயற்கையுடன் இடையூறாது போராடுகின்றன. மனிதனும் ஒரு ஜீவராஜி என்ற அடிப்படையில் அவன் இயற்கையுடன் மாத்திரம் அல்ல மனித சமூகத்திற்கு இடையேயும் ஓயாது போராட வேண்டியுள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் | Geopolitical Wars In The New Political Order

ஜீவராசிகள் இடத்துக்காக போராடுகின்றன, உணவுக்காக போராடுகின்றன, பாலியல் இனச் சேர்க்கைக்காக போராடுகின்றன. இவை ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவை.

ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை. எனினும் இடத்திற்கான போராட்டமே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. தனது இருப்பிடத்தை இழந்து எந்த ஜீவராதியும் நிலைபெற முடியாது. அந்த அடிப்படையில் பிராணிகளும்சரி மனிதனும்சரி தன்னுடைய இடத்தினை பாதுகாப்பதற்கான போராட்டமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சிங்கங்கள் தாம்வாழும் பிரதேசத்துக்குள் மாற்று சிங்கக் கூட்டங்கள் நுழைவதை அனுமதிக்காது. காகங்களும் அப்படித்தான். சிறிய குருவிகளும் தங்கள் கூட்டை நோக்கி புழு பூச்சி பிராணிகள் வருவதையும் அனுமதிக்காது.

புழுக்கள்கூட தம்முடைய கூட்டை பாதுகாப்பதற்காகவே போராடும். ஆக ஒவ்வொன்றும் தான் வாழும் சூழலை பாதுகாப்பதற்கு உயிர்கள் அனைத்தும் போராடுகின்றன. தான்வாழும் சூழலின் எல்லைகளை வகுத்து அவை தமக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை வடிவமைத்துக் கொள்கின்றன.

இத்தகைய உயிரிகளின் பாதுகாப்பு வளையம்தான் இன்று உலகளாவிய அரசியலில் அரசுகள் உருவாக்கிக்கொள்ளும் பாதுகாப்பு வலைய நடவடிக்கைகள் புவிசார் அரசியல் என அழைக்கப்படுகிறது.

அந்த வலயத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் யுத்தத்தினையே புவிசார் அரசியல் யுத்தம் (Geopolitical war) என வரையறுக்கப்படுகிறது.

500 கோடி ரூபா நட்டஈடு : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு

500 கோடி ரூபா நட்டஈடு : இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கு உத்தரவு

 நீண்ட போர்கள்

இத்தகைய புவிசார் அரசியலை மாற்றி அமைப்பதற்காக குறிப்பிட்ட மக்கள் கூட்டம் தாம் வாழ்கின்ற நிலப்பரப்பில் அவர்களுக்கு இருக்கக்கூடிய இயற்கையான பாதுகாப்பும், இயற்கை வளச் சாதகங்களையும் கவர்ந்து தமக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதற்காக எதிர்த்தரப்பினர் மேற்கொள்கின்ற சேர்க்கையான அபிவிருத்திகள், குடியேற்றங்கள், அரசியல் நோக்கங்கள் அல்லது எதிர்கால அரசியலை தமக்கு சாதகமாக மாற்றி அமைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அனைத்தையும் அரசியற் புவியியல் (Political Geography)என அழைக்கப்படுகிறது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் | Geopolitical Wars In The New Political Order

காசாவில் மேற்கொள்ளப்பட்ட யூத குடியிருப்பாக இருக்கலாம், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்களாக இருக்கலாம், திபேத் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சீனக் குடியிருப்புகளாக இருக்கலாம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க கண்டத்தில் குடியேறிய ஐரோப்பியர்களாக இருக்கலாம், ஆஸ்திரேலியா நிலப்பரப்பில் குடியேறிய ஆங்கிலேயர்களாக இருக்கலாம் இவை அனைத்தும் அரசியல் புவியியல் என்ற பதத்துக்குள்ளே அடங்குகின்றன.

அவ்வாறே பணமா கால்வாய் சுவேஸ் கால்வாய் என்பனவும் அரசியல் புவியியலே. அதே போல சீனப் பெருஞ்சுவரும் ஒரு அரசியல் புவியியல் நடவடிக்கையே. இப்போது அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் கட்டும் சுவரும் அத்தகையதே.

இவ்வாறுதான் ஒவ்வொரு அரசுகளும் தங்களை பலப்படுத்தவும், தங்களை பாதுகாக்கவும் இயற்கையாக அமைந்திருக்கின்ற இயற்கைச் சூழலை தமக்கு சாதகமாக மாற்றி அமைக்கின்ற அரசியல் புவியியல் நடவடிக்கையில் யுத்தங்கள் தவிர்க்க முடியாதாகிறது.

இந்த அடிப்படையிலேதான் உலகின் மிக நீண்ட போர்கள் நடந்திருக்கின்றன. இப்போது நாம் புவிசார் அரசியலுக்காக நடத்தப்படுகின்ற யுத்தங்களின் இலக்கு உலக ஒழுங்கை தம்பக்கம் வைத்திருப்பதற்கான நடவடிக்கையாகவே அமைந்திருக்கிறது.

வெற்றுப் பார்வைக்கு இவை எல்லைப் பிரச்சினையாக அல்லது மத ரீதியான பிரச்சனையாக அல்லது பிராந்தியத்தின் சுயாதீனத்திற்கான யுத்தங்களாக பார்க்கப்படலாம் . ஆனால் இந்த யுத்தங்கள் உலக ஒழுங்கை (World order) தம் கைவசம் வைத்திருப்பதற்காக பலம் வாய்ந்த நாடுகளினால் ஒரு பதிலாள் யுத்தமாகவே இவை நடத்தப்படுகின்றன.

இதுவே அன்றைய உலாகளாவியஅரசியல் போக்காக (Global political process) கானப்படுகிறது. ஆயினும் உலகளாவிய ஒழுங்கை கையாளுவதற்கான இன்றைய இந்த யுத்தத்தை பலரும் பலவாறாக விமர்சனம் செய்கின்றனர்.

இது உலகளாவிய அமைப்பு முறைமையை(global system) மாற்றத்திற்கான யுத்தங்களாக பேசப்படுகிறது. உண்மையில் இன்றைய உலகின் முறமை என்பது யாராலும் மாற்றி அமைக்கப்பட முடியாதது.

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான விதிமீறல்கள்..! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமான விதிமீறல்கள்..! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை

பொருளாதார முறைமை

இன்றைய உலகின் பொருளியல் முறை என்பது இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்னான கட்டமைப்புச் செய்யப்பட்டது. அந்த உலக பொருளாதார முறமையே இன்றைய அரசியலை தீர்மானித்தது. அந்த முறமையை மனிதகுல வரலாற்றில் இரண்டு முறைதான் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.

முதலாவது சவாலுக்கு உட்படுத்தியவர் காரல் மார்க்ஸ். அவர் மாக்ஸிச கோட்பாட்டை முன்வைத்து பொருளாதார முறைமையை கேள்விக்கு உள்ளாக்கினார். அவரை பின்பற்றி வந்த லெனின் அந்தப் பொருளாதார முறைமையை மாற்றி அமைத்து உலக முறமையை கேள்விக்குள்ளாக்கியதோடு உலக ஒழுங்கை (World order) மாற்றியம் அமைத்துக் காட்டினார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் | Geopolitical Wars In The New Political Order

ஆயினும் அந்த முறை மாற்றம் என்பது 4500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான முறைமையுடன் முட்டி மோதி ஈற்றில் தோல்வி அடைந்து போய்விட்டது.

ஆகவே உலகளாவிய முறமையை இனி யாராலும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் உலக ஒழுங்கினை மாற்றி அமைக்க முடியும். இப்போது ஒற்றை பொருளாதார முறைமையின் அடித்தளத்தில் இரண்டு அதிகாரம் மையங்கள் தோன்றி விட்டன.

அது அமெரிக்கா சார்ந்த ஒரு அதிகார மையமும், சீனா சார்ந்த ஒரு அதிகாரம் மையமும் தோன்றிவிட்டது. ஒரு பொருளாதார மையத்தில் தோற்றம் கொண்டிருக்கின்ற இரண்டு அதிகார மையங்களுக்கும் இடையிலான உலகளாவிய அரசியல் நலன்கள் (Global Political Interests) சந்திக்கும் புள்ளிகளில் முட்டிமோதும்போது யுத்தங்கள் அவசியப்படுகிறது.

அவைதான் இப்போது பதிலாள் யுத்தமாக உக்ரைனிலும், மத்திய கிழக்கிலும் தொடரப்படுகிறது. இந்த பதிலாள் யுத்தத்தின் இறுதி இந்து சமுத்திரத்திலும் பின்னர் தென்சீனக் கடலிலும் நிகழும்.

ஆயினும் அவற்றுக்கு இடையில் அவரவர் தமது அணியை பலப்படுத்தவும், எதிரியின் பலம், பலவீனத்தை அறிந்து கொள்ளவும் இத்தகைய பதிலாள் யுத்தங்கள் தவிர்க்க முடியாதவை.

இன்று உக்ரைனில் நடக்கும் யுத்தம் என்பது உக்ரைனுக்கு தனது இறைமைக்கான யுத்தம். ரஷ்யாவை பொறுத்த அளவில் அது அவர்களுக்கான புவிசார அரசியல் யுத்தம். ஆனால் அது அமெரிக்காவைப் பொறுத்தளவில் உலகம் தழுவிய தனது ஆதிக்கத்துக்கான யுத்தம். சீனாவைப் பொறுத்தளவிலும் அதற்கும் இதே நிலைதான் உண்டு.

ஆயினும் அது தன்னை பலப்படுத்தும் வரை மௌனம் சாதிக்கிறது என்று கொள்ளப்பட வேண்டும். இத்தகைய புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் பிரிட்டானியாவின் புவியியல் அறிஞரான சேர் கல்போட் ஜான் மேக்கிண்டர்(Sir Halford John Mackinder) இருதயநிலக் கோட்பாடு (Heartland theory) என்றொரு கோட்பாட்டை முன்வைத்தார்.

அந்தக் கோட்பாடு இன்றைய புவிசார் அரசியல் யுத்தங்களுக்கும், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஐரோ-ஆசிய பிராந்தியத்தின் யுத்த நிலமைகளுக்கும் உரிய பல காரணங்களை தெளிவாகியுள்ளது.

புகைப்படம் எடுத்து படம் காட்டும் போலி தமிழ்தேசியவாதிகள்! வேலன் சுவாமிகள் ஆதங்கம்

புகைப்படம் எடுத்து படம் காட்டும் போலி தமிழ்தேசியவாதிகள்! வேலன் சுவாமிகள் ஆதங்கம்

மூலோபாய கோட்பாடு

மைக்கிண்டர் 1904ம் ஆண்டு முழு உலகம் தழுவிய ஆளுகைக்கான மூலோபாய கோட்பாடு(பூகோள அரசியல்) ஒன்றை வெளியிட்டார். அதுவே இருதயநிலக் போட்பாடு என அழைக்கப்படுகிறது.

அவர் குறிப்பிடும் இருதய நிலம் எனப்படுவது மத்திய ஐரோ-ஆசிய பகுதியும் மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கிய பகுதியை மூலோபயர ரீதியில் உலகின் “”இருதயநிலம்”” (Heartland ) என அழைக்கின்றனர்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் | Geopolitical Wars In The New Political Order

ஏனெனில் இந்த நிலப்பரப்பை யார் ஆள்கிறார்களோ, கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களினால் ஆசியா ஆபிரிக்கா ஐரோப்பா கண்டங்களையும் அத்தோடு இந்து,பசுபிக் அத்திலாந்தி சமுத்திரங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

இந்து சமுத்திரத்தையும் அட்லாண்டிக் சமுத்திரத்தையும் கட்டுப்படுத்துவதற்கு இந்த இருதய நிலப் பகுதி இன்றியமையாதது. இப்ப பகுதியை யார் தன் கட்டுப்பாட்டங்கள் கொண்டு வருகிறார்களோ அவர்களால் இந்த உலகத்தை ஆளவும் கட்டுப்படுத்தவும் நிர்ணயம் செய்யவும் முடியும் என மைக்கின்டர் தனது புவியியல் அறிவின் ஊடாக பூகோளம் தழுவிய ஆக்கிரமிப்பு ஆளுகை மேலாண்மை மூலோபாயம் ஒன்றை முன்வைத்தார்.

அதுவே இருதய நிலக்கோட்பாடு (Heartland theory) எனப்படுகிறது. அது மேற்குலக மனநிலையில் அவர்களுக்கு பொருத்தமானதும் சரியானதும் கூடத்தான். மைக்கிண்டர் இருதயநிலக் கோட்பாட்டை வெளியிடுவதற்கு முன்னர் நடைமுறையில் இரு ஐரோப்பியர்கள் பிரயோகித்துப் பார்த்துள்ளனர்.

மசிடோனியாவில் பிறந்த கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் (கி. மு. 332 – கி. மு. 323) பிரயோகித்து பார்த்தார் துரதிஷ்டவசமாக அவர் தனது இளவயதில் மரணிக்க நேர்ந்து விட்டது. அதே பாணியில் பின்னாளில் பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் முயன்று தோற்றுப் போனார்.

உலகை தலைமை

அதன் பின்னர் ஜெர்மனிய சர்வதிகாரி அடல்ட் ஹிட்லர் முயன்று இருதய நிலத்தை கைப்பற்றினாலும் அதனைத் தொடர்ந்து தக்க வைப்பதில் தோல்வியடைந்து அழிந்து போனார். இவ்வாறு 3 ஐரோப்பியர்களும் ஆக்கிரமிப்பும், அதன் பின்னன அணியமைத்தல். தற்பாதுகாப்பு அகியவற்றின் முகாமைத்துவ பலவீனமே தோற்றதற்கான காரணங்களாயின.

இதனை தொடர்ந்து 20-ஆம் நூற்றாண்டு இறுதியில் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஏழு இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு கூட்டணியை உருவாக்கினர்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் | Geopolitical Wars In The New Political Order

இந்நாடுகளுக்கு பொதுவான யூரோ என்ற நாணயத்தை அமெரிக்க டொலருக்கு நிகராக உருவாக்கினர். இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் 21 நாடுககள் இணைந்திருகின்றன. ஐரோப்பியர்கள் தங்கள் இழந்துபோன பெருமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் உலகின் வளங்களை கைக்கொள்ளவும் மைக்கிண்டரின் இருதயநிலக்கோட்பாட்டை கையில் எடுத்து செயற்படுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த உலகை தலைமை தாங்குவதற்கு அமெரிக்காவும் இந்த இருதய நிலத்தை தன்னுடைய செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருக்கவே முனைகிறது.

எது எப்படி இருப்பினும் அமெரிக்காவும் ஐரோப்பியர்களும் மேற்குலகம் என்ற அணியைச் சார்ந்தவர்கள்தான். இந்த மேற்குலகம் நேட்டோ என்னும் இராணுவக்கூட்டு ஒன்றை உருவாக்கி அதனூடாக பலம்வாய்ந்த இராணுவ அணியை கொண்டுள்ளது.

இவர்கள் தங்களுக்குள்ளே எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த இந்த உலகத்தை ஆளுவதில் மூலவளங்களை சூரையாடுவதிலும் தமக்கிடையே அவரவர் தகுதி ஏற்றவாறு பங்கீடுகளை செய்துகொள்வார்.

இந்த இருதய நிலை கோட்பாட.டின் தாக்கம் இன்றைய யுத்தங்களில் எவ்வாறு பிரதிபலிக்கிறது, அதன் தாக்கங்கள், மற்றும் போக்குகள் பற்றியும் இனி நடத்தப்பட்டவிருக்கும் யுத்தங்கள் பற்றியும் அடுத்த தொடரில் பார்ப்போம்...

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US