இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவின் கருத்துக்கு ரஷ்யா பதிலடி
இணையவழி பாதுகாப்பு யோசனைக் கட்டுப்பாடுகள் என்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை எனவும் இதில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு முற்றிலும் பொருத்தமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையவழி பாதுகாப்பு யோசனைக்குறித்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசியலில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவர் லெவன் டழகர்யன் புவிசார் அரசியல் விவாதத்தை ஆரம்பித்துள்ளார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம்
இந்நிலையில், கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,
“இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விடயங்களை ரஷ்யா கவனித்து வருகிறது.
உள்நாட்டு அரசியல் மற்றும் இலங்கையில் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு சக்திகள் மத்தியில் இருந்து வரும் அனைத்து கருத்துக்கள் மற்றும் எதிர்வினைகளையும் ரஷ்யா கவனிக்கிறது.
Comment of H.E. Mr. Levan Dzhagaryan, Russian Ambassador to Sri Lanka, regarding adoption of the Online Safety Bill in Sri Lanka: OSB is internal matter of Sri Lanka.
— Russian Embassy in Sri Lanka (@RusEmbSriLanka) January 26, 2024
Read it full: https://t.co/w5vUksOF5W pic.twitter.com/LhHRYIqb3E
முன்னதாக இந்த யோசனை நிறைவேற்றம், ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அத்துடன், டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்பதுடன், இலங்கைக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதேநேரம் எந்தவொரு சட்டமும் அதன் மக்களின் குரல்களை நசுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்துகிறது.” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |