இன அழிப்பை மேற்கொண்டவர்களுடன் சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர்: சிறீதரன் எம்.பி விசனம்
எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் விசனம் தெரிவித்தார்.
கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்துக்கான மக்கள் சந்திப்பு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று(13.9.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் , "மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடுமையான எதிர்ப்பு
இதற்குப் பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வருகின்றது.
இதன்போது அந்தத் திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதற்கு எமது ஆதரவு எப்போதுமே இல்லை.

தேர்தல் காலங்களில் மக்கள் சில நேரங்களில் ஆராயாமல் அல்லது கோபத்தின் அடிப்படையில் சிலரைத் தெரிவு செய்கின்றனர். ஆனால், பின்னர் அவர்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள் என்பதை மக்கள் கவனமாக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
எங்களை அழித்தவர்களுடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்ற இவ்வாறானதொரு கடினமான அரசியல் சூழலில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
பல வழக்குகளுடன் தொடர்புடைய குழு அநுராதபுரத்தில்! ஒன்றுகூடியவர்களின் பின்னணி தொடர்பில் பிரதி அமைச்சர் கூறும் விடயம்