விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த வீரர் என்பதை உலகுக்கு காட்டியுள்ளார் : மேர்வினுக்கு ரவிகரன் பதிலடி (Video)
தமிழர்களை இந்த அரசும் கடும்போக்கு வாதிகளும் ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு
இனப்படுகொலை என்ற வடிவத்தினை மாற்றி வேறு வடிவங்களில்
செய்து வருகின்றார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று (14.08.2023) இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 53 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்போது தென்னிலங்கையினை சேர்ந்த ஒருவர் கூறியிருக்கின்றார் தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவோம் என்று இவ்வாறு ஒவ்வொருவரும் பேசி வருகின்றார்கள். தமிழர்களின் வீரத்தினை காலம் காலமாக சொல்லி வருகின்றார்கள்.
எங்களை நாங்களே ஆழக்கூடிய தீர்வினை தரவேண்டும்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலை சிறந்த வீரன் என்பதை உலகத்திற்கு காட்டி நின்றார். இந்த நிலையில் தலைகளை களனிக்கு கொண்டு செல்லப்போகின்றார்களாம். இப்படியான அரக்க குணம் கொண்டவர்களை வைத்துக்கொண்டுதான் அரசு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழர்களின் தலைகளை கொண்டுவருவோம் என்று சொல்கின்றவர் மேர்வின் சில்வா 2015 ஆம் ஆண்டு ராஜபக்சவின் ஆட்சியில் ஒரு அமைச்சராக இருந்தவர் அதனை விட சரத்வீரசேகர தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டு அமைச்சராக இருந்தவர்.
சிங்கள மக்களிடமும் புத்திஜீவிகள் இருக்கின்றார்கள். நிச்சயமாக இப்படியானவர்களை ஓரம் கட்டுவார்கள் தமிழர்களுக்கு எங்களை நாங்களே ஆழக்கூடிய தீர்வினை தரவேண்டும் என்பது எங்களின் கோரிக்கை.
குண்டுபோட்டு அழித்த மாணவர்களின் நினைவாக அழுது கண்ணீர் வடித்தீர்கள். இதனை செய்தவர்களுக்கான பதிலை சொல்லவேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு
செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி - ஈகைச் சுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர்.
செய்தி: ராகேஷ்
சட்டத்தரணி வி.மணிவண்ணனின் அலுவலகத்தில் அனுஷ்டிப்பு
இதன்பொழுது உயிர்நீத்த உறுவுகளிற்கு ஒரு நிமிட அகவணக்கமும் ஈகைசுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி செலுத்தப்பட்டது.
செய்தி:தீபன்



















யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
