பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு வவுனியாவில் முன்னெடுப்பு
வவுனியாவில் பொதுஜன பெரமுனவின் பேராளர் மாநாடு வவுனியா நகர மண்டபத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதம விருந்தினருக்கு மாலை அணிவித்து மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மங்கள விளக்கேற்று வைபவமும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயரத்தின கேரத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, வவுனியா நகரசபை உபதலைவர் குமாரசாமி, தெற்கு சிங்கள பிரதேச சபை உபதலைவர் வசந்த ராஜகருணா, விளையாட்டு துறை அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலித்த மற்றும் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam