தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சம்பள அதிகரிப்பினை இலக்காகக்கொண்டு வற் வரி அதிகரிக்கப்பட்டால், தனியார்துறையினர் பாரியளவு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
வரி அறவீடு
கல்வித்துறையையும் மாணவர்களையும் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி நேர்மையுடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தனியார் துறைகளிடமிருந்து வரி அறவீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் மறைகரமொன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகளும், கடும்போக்குவாதிகளும் இந்த தொழிற்சங்க போராட்டங்களின் பின்னணியில் செயற்பட்டு வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறையினருக்கு நிவாரணம்
கோவிட் காலத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்கள் இரண்டு ஆண்டுகளாக முழுச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர் எனவும், தனியார் துறையினருக்கு அவ்வாறு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் கெமுனு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் போராட்டம் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்களின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுத்தாலும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கப் பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலர் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை பின்னோக்கி நகர்த்த முயற்சிப்பதாக, பிள்ளைகளின் கல்வியை பணயமாக வைத்து இடதுசாரி கடும்போக்குவாத அரசியல் சக்திகள் ஜனாதிபதி ஆசனத்தில் அமர முயற்சிப்பதாக கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
