க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் (Video)
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம் இன்று (29.05.2023) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டெங்கு பாதுகாப்பு
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
விசேட பரீட்சை நிலையங்கள்
இதேவேளை, விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணம்
வடக்கு மாகாணத்தில் இருந்து கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு 23 ஆயிரத்து இருபத்தேழு பாடசாலைப்
பரீச்சாத்திகளும் 6ஆயிரத்து 341 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் பரீட்சையில்
தோற்றுவதற்குரிய விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர்
ஜோன் குயின்ரேஸ் தெரிவித்தார்.
இன்று ஆரம்பமாகி உள்ள கல்விப் பொதுத் தராதர பரீட்சை தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் குறித்த பரீட்சைக்காக 248 பரீட்சை நிலையங்களும் 6 பிராந்திய பரீட்சை சேகரிப்பு நிலையங்களும் 77 இணை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- கஜிந்தன்
பொதுத் தராதர சாதாரண பரீட்சை
யாழ். மாவட்டத்தில் முதலாவது நிலையமான தீவகம் மற்றும் தென்மராட்சி வலையங்களில் 5ஆயிரத்து 272 பாடசாலை பரீட்சாத்திகளும்,1338 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 6610 பேர் பரீட்சையில் தோற்றுகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் இரண்டாவது நிலையமாக வடமராட்சி மற்றும் வலிகாம வலயங்களைச் சேர்ந்த 6310 பாடசாலை பரீட்ச்சாத்திகளும் 1743 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 8053 பேர் பரீட்சையில் தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 341 பாடசாலைப் பரீட்ச்சாத்திகளும் 762 தனிப்பட்ட
பரீட்சாத்திகளுமாக 3803 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2684 பாடசாலை பரீட்ச்சாத்திகளும் 469 தனிப்பட்ட
பரீட்சாத்திகளுமாக 3153 பேரும்இ
மன்னார் மாவட்டத்தில் 2247 பாடசாலை பரீட்சாத்திகளும் 995 தனிப்பட்ட
பரீட்சாத்திகளுமாக 3242 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3473 பாடசாலை
பரீட்ச்சாத்திகளும் 1007 தனிப்பட்ட பரீட்சாத்திகளுமாக 4480 பேர் இன்று
ஆரம்பமாக உள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்தார்.
வவுனியா
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்து செய்யப்பட்டு பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.
வவுனியாவில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு 4480 மாணவர்கள் தகுதி
பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக 40 பரீட்சை மத்திய நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
செய்தி - திலீபன்
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அக்ரபோதி தேசிய பாடசாலையில் சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளது.
பரீட்சை மண்டபங்களில் பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
கந்தளாய் கல்வி வலத்தில் 21 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - பாரூக் முபாரக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |