க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்பொழுது வெவளியிடப்படும் என்பது குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வெளியிட்டுள்ளார்.
அதன்படி பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பிரயோக பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக கம்பிகள், ஆளிகள் மற்றும் மின்குமிழ்கள் போன்றவற்றை கொள்வனவு செய்ய பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சை: பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு |
2021இற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை
இதேவேளை இந்த நாட்களில் நடத்தப்பட்டு வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் ஒருவருக்கு பதிலாக மற்றுமொருவர் பரீட்சையில் தோற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2022இற்கான க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள்
மேலும், எதிர்வரும் அக்டோபர் மாதம் 15ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சையும், 16ம் திகதி முதல் உயர்தரப் பரீட்சையையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
