உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உறுதிப்படுத்தியுள்ளார்.
சாதாரண தர வினாத்தாள் மதிப்பீட்டுப்பணிகள்
இதேவேளை, க.பொ.த சாதாரண தர வினாத்தாள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறைப் பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செயல்முறைத் தேர்வுகள் முடிந்தவுடன் சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri