க.பொ.த உயர்தரத்திற்கான விண்ணப்பம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு
கல்விப் பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (12.12.2023) கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சுற்றறிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகள் விண்ணப்பங்களை கோர வேண்டும்.
மாணவர்களுக்கு படிக்கும் பாடசாலையில் பொருத்தமான பாடம் இல்லை என்றால், அந்த மாணவர்களுக்கு மற்ற பாடசாலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
முன்னுரிமை
உதாரணத்திற்கு கொழும்பு ஆனந்தா கல்லூரியில் 182 மாணவர்கள் இம்முறை 9 A சித்திகளையும், விசாக வித்தியாலயத்தில் 206 மாணவர்கள் 9 A சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறான நிலையில் வேறு பாடசாலையில் இருந்து விண்ணப்பிக்கும் போது அந்த தகைமையைப் பெற்றுள்ள, ஆனால் அந்த வலயத்திலோ அல்லது கற்ற பாடசாலையில் பாடப் பிரிவு இல்லாத பிள்ளைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
