ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்!
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய வெடிபொருட்கள் தொடர்பான வணிகங்களை நடத்துவதற்கான உரிம கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை வெடி பொருட்களை இறக்குமதி செய்பவர்களின் வணிகத்திற்கான உரிம கட்டணம் மற்றும் வெடிபொருள் வழங்குனர்களின் வணிகத்திற்கான உரிம கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உரிம கட்டணத்தில் மாற்றம்
வெடிபொருட்களை வைத்திருப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான அனுமதி கட்டணத்தை 2000 ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 2,000 ரூபாவாக இருந்த கல் வெடி மருந்து உற்பத்திக்கு மட்டுமான உரிம கட்டணம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிம கட்டணம் 4,000 ரூபாவிலிருந்து 7,000 ரூபாவாகவும், கல் வெடி மருந்து மற்றும் பாதுகாப்பு சேவை நூல் தயாரிப்புக்கான உரிம கட்டணம் 7,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
