வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தேர்வு தொடர்பில் வெளியான வர்த்தமானி
வல்வெட்டித்துறை நகர சபைக்கான தலைவர் தெரிவு எதிர்வரும் 15ஆம் திகதி சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் நவம்பர் மாதம் இரு தடவை தோற்கடிக்கப்பட்டதால் அதன் தலைவர் செல்வேந்திரா பதவியிழந்தார்.
இந்த இடத்துக்கே புதியவரை நியமிப்பதற்கான தேர்வு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் என வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் வர்த்தமான அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வு செய்யப்பட்ட சபையில் இதுவரை இருவர் வல்வெட்டித்துறையின் நகர பிதாவாக இருந்த நிலையில் தற்போது மூன்றாவது தடவையாக நகர பிதாவுக்கான தேர்வு இடம்பெறவுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
