ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம், உயர் நீதிமன்ற வளாகம், மேல் நீதிமன்ற வளாகம், கொழும்பு நீதவான் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள், அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
