பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு
பன்றி காய்ச்சல் பரவலை தடுக்கும் விசேட வர்த்தமானி வெளியீடு இலங்கையின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த சில மாதங்களாக கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever - ASF) நோய், மேலும் பரவுவதனை தடுக்கும் நோக்கில், விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் “ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அபாயப் பகுதிகள்” எனவும், பன்றிகள் “நோய் அபாய விலங்குகள்” எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1992ம் ஆண்டு 59ம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி கடந்த 3 ஆம் திகதி முதல் அமலுக்கு வருவதாகவும் மூன்று மாதங்களுக்கு வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் அபாயப் பகுதிகளில் இருந்து நோயை பரப்பக்கூடிய சில நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் வர்த்தமானியில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
