காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இழுபறி! புதிய மாற்றம் எதுவும் இல்லை
எகிப்திய பேச்சுக்களில்; முன்னேற்றம் அடைந்துவிட்டதாக கூறப்பட்டாலும், காசா போரில் போர் நிறுத்தம் குறித்து கெய்ரோவில் இடம்பெறும் புதிய சுற்று பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று சிஐஏ இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் வருகைக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமையன்று எகிப்துக்கு குழுக்களை அனுப்பின. காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்து பாலஸ்தீனிய குடிமக்களுக்கு உதவி பெறும் ஒப்பந்தத்திற்கான அமெரிக்க அழுத்தத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனினும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, எனவே, கெய்ரோ பேச்சுவார்த்தையில் புதிதாக எதுவும் ஏற்படவில்லை என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த ஆறு மாத கால மோதலில் சுமார் 33,207 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சமீபத்திய தகவலின்படி காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2.3 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் வீடற்ற நிலையில் மற்றும் பலர் பஞ்சத்தின் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 7 அன்று நடந்த எல்லை தாண்டிய தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் 1,200 பேரை ஹமாஸ் கொன்றது.
அழிக்கப்பட்ட சொத்துக்கள்
இதுவே மோதலை தூண்டியது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் இடம்பெற்ற மோதல்களில் தமது 600க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த திங்களன்று, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் உள்ள சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கிய பின்னர், பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள், குறித்த பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளனர்.
ரஃபா நகரில் கூடாரங்களில் தங்கியிருந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
சிலர் கழுதை வண்டிகள், ரிக்சாக்கள் மற்றும் திறந்தவெளி வாகனங்களில் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் தாம் விட்டுச் சென்ற கட்டிடங்கள், சாலைகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கெய்ரோ பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக எகிப்திய பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இருதரப்பும் விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளதாகவும் அந்த தரப்புக்கள் தெரிவித்தன. இந்தநிலையில் இருதரப்பு பிரதிநிதிகள் கெய்ரோவை விட்டு வெளியேறினர்.
எனினும் 48 மணி நேரத்திற்குள் ஆலோசனைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் இனி காசாவைக் கட்டுப்படுத்தும் வரை அல்லது இஸ்ரேலை இராணுவ ரீதியாக அச்சுறுத்தும் வரை தனது படைகள் தளரப்போவதில்லை என்று கூறி, விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதையோ அல்லது காஸாவிலிருந்து வெளியேறுவதையோ இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |