தாய்லாந்து பறந்தார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), 09 பேர் கொண்ட குழுவுடன் தாய்லாந்திற்கு (Thailand) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்திலுள்ள பாங்காக் (Bangkok) நகரை நோக்கி குறித்த குழுவுடன் இன்று (09.04.2024) அதிகாலை12.55 மணியளவில் விஜயத்தினை அவர் ஆரம்பித்துள்ளார்.
எனினும், அவரின் பயண நோக்கம் தெரியவில்லை.
திடீர் விஜயம்
அண்மையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் தமக்கு தெரியும் என கூறியிருந்ததுடன் கடந்த சில வாரங்களாக இலங்கையில் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும், அவரின் பங்கேற்பு இல்லாமல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் பீடம் கூட்டப்பட்டு, கட்சியின் பதில் தலைவராக, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, அவர் தற்போது தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan