காசா அமைதி உச்சி மாநாடு : அமெரிக்க - எகிப்திய ஜனாதிபதிகள் தலைமை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் நாளை திங்கட்கிழமை ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் காசா அமைதி உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்கள் என எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் என, எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது.
புதிய சகாப்தத்தை உருவாக்குதல்
இந்த மாநாடு, காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருக்கும்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரும், இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
வருகையை உறுதிப்படுத்தியுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் தனது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஷார்ம் எல்-ஷேக் மாநாட்டுக்கு செல்வாரா? என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை, அதே நேரத்தில் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
