காசா பணயக்கைதிகளுக்கு விரைவில் விடுதலை.. ட்ரம்ப்பின் நம்பிக்கை!
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மறைமுக பேச்சுவார்த்தைகள் நாளையதினம்(06.10.2025) திங்கட்கிழமை எகிப்தில் தொடங்க உள்ளன.
இவ்வாறிருக்க, பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காசா நிர்வாகத்தை பலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட 20 அம்ச அமெரிக்க அமைதித் திட்டத்தின் சில விடயங்களுக்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது.
தொடரும் தாக்குதல்
அமைதித் திட்டம் பேச்சுவார்த்தையில் உள்ள போதிலும் காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடருகின்றன. எனவே, அதிகாரப்பூர்வ போர் நிறுத்தம் இன்னும் நடைமுறையில் இல்லை.
இதனால், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு உள்ளான போது தங்களை தற்காத்துக் கொள்ள தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
அமைதித் திட்டம்
இந்நிலையில், அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தின் படி, போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து 48 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், 48 பணயக்கைதிகளில் 20 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருப்பதாக நம்பப்படுகின்றது.
இவ்வாறிருக்க, அமைதித் திட்டத்தை வெற்றிகரமாக இறுதிசெய்ய இஸ்ரேல், ஹமாஸ், அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேச்சுவார்த்தையாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 11 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri
