காசாவில் நிரந்தர அமைதி.. ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்
போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினை அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இரு திசைகளிலும் ரஃபா கடவைத் திறப்பதும் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என கலீல் அல்-ஹய்யா குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பு ஒப்புதல்..
காசாவில் இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளிக்கும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தின் வளர்ச்சியில் முக்கிய தருணங்களில், ட்ரம்பின் தனிப்பட்ட தொடர்பு - ஒரு வலுவான கையாகவும், மென்மையான வழிகாட்டியாகவும் - முக்கிய பங்கு வகித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தின் முதல் கட்டம், போரை நிறுத்தி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ட்ரம்பின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒத்துழைப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஹமாஸின் மூத்த தலைவரும் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
