காசா போர் நிறுத்த விவகாரம்: ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை
பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரஃபா(Rafah) எல்லைக் கடவையில் ஒரு கண்காணிப்புப் பணியை மீண்டும் நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
பெல்ஜியம்(Belgium) தலைநகரில், பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபாவைச் சந்தித்த பின்னர் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் பத்திரிகையாளர்களிடம் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய தரப்பினரிடமிருந்து அழைப்பையும், எகிப்தின் ஒப்பந்தத்தையும் பெற்று முன்னேற வேண்டும் என்று கல்லாஸ் கூறியுள்ளார்.
காசா பகுதி
27 நாடுகளைக் கொண்ட இந்த கூட்டணி, கடவையைக் கண்காணிக்க 2005 இல் ஒரு சிவில் பணியை அமைத்தது.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ், காசா பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரஃபா கடவை பாலஸ்தீனப் பகுதிக்குள் ஒரு முக்கியமான நுழைவாயிலாகும், மேலும் அந்தப் பகுதிக்குள் உதவிகளை பெருமளவில் அனுப்புவதற்காக அதை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புப் பணியில் 10 ஐரோப்பிய ஊழியர்கள் வரை இருப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |