விரிவுபடுத்தப்படவுள்ள தாக்குதல் திட்டம்! காசா மக்களுக்கு விசேட அறிவிப்பு
பணயக்கைதிகள் விடுவிப்பில் பெரும் முறுகலை சந்தித்துள்ள இஸ்ரேல் - ஹமாஸின் தாக்குதல் திட்டங்கள் மத்தியகிழக்கில் அதிர்வளைகயை ஏற்படுத்தியுள்ளன.
இதன்படி காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பிக்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் ராபா மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாரு கூறியுள்ளது.
இதற்கமைய காஸாவில் இராணுவ நடவடிக்கைகளை இன்று விரிவுபடுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் திட்டம்
பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
அதே நேரம் அதிக அளவிலான மக்களை அப்பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் இராணுவம் வெளியேற்றி வருகிறது.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் காஸா மக்களை இஸ்ரேல் தலைவர்கள் பாராட்டியும் ஊக்குவித்தும் வருகின்றனர்.
காஸா மீதான தாக்குதல்
“சண்டை நடக்கும் இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும். காஸா மக்கள் ஹமாஸ் அமைப்பை எதிர்க்க வேண்டும், பிணைக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும். அதுதான் போரை முடிவுக்குக் கொண்டுவரும்,” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
காஸாவின் தென்பகுதியில் உள்ள ராபா, கான் யூனிஸ் பகுதியில் வாழும் மக்களைக் கடலோரப் பகுதியான அல்மாவாசிக்குச் செல்ல இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் இன்னும் 59 பணையக்கைதிகள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
