முல்லைத்தீவில் பெண்ணொருவருக்கு நடந்த கொடூரம்! அருகிலிருந்தவர்களின் மிக மோசமான செயல்
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில், இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்படும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
நேற்றையதினம் குறித்த பெண் மீது இவ்வாறு கடுமையான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனிதாபிமான கன்னிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் ஒருவரே இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு இலக்கானதாக தெரியவருகின்றது.
மிகவும் மோசமான தாக்குதல்
இந்தப் பெண்னை தாக்கும் நபர் கடுமையான மற்றும் தவறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு அந்தப் பெண்ணை திட்டுவதுடன், மிகவும் மோசமான வகையில் அந்த பெண் மீது தாக்குதல் நடத்துகின்றார்.
தனது மனைவியின் நடத்தையை அந்தப் பெண் தவறாக விமர்சித்தார் என்று கூறி குறித்த நபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
ஆனால், இந்த தாக்குதல் நடத்தப்படும் போது அருகில் அதிகமான மக்கள் குழுமியிருந்தும், ஒருவரும் தாக்குதலை தடுக்கவோ, அந்தப் பெண்ணைக் காப்பாற்றவோ முன்வரவில்லை.
மாறாக காணொளிப் பதிவு செய்வதில் தங்களது முயற்சியை காண்பித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் செயலையும், தாக்குதல் நடத்துபவரின் செயலையும் விமர்சிக்க மட்டுமே முடிந்த பலரால் அந்த தாக்குதலை தடுக்க முடியாமல், கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது என்பது எத்தனை வக்கிரம் நிறைந்த செயல். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படுவாராயின், அவர் மட்டுல்ல அருகிலிருந்தவர்களுக்கும் சிறைச் செல்ல தகுதியானவர்களே..
குறிப்பாக முல்லைத்தீவு என்பது இலங்கைத் தமிழரிடத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். தேசத்திற்காக பல உயிர்களை தியாகம் செய்த ஒரு உன்னத பூமி. ஆனால், அந்த உயிர்த்தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் சற்றும் பொருந்தாத, அதனை மதிக்காத சமூக சீர்கேடுகள் தமிழர் பகுதிகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு விஷ்வரூப வளர்ச்சி கண்டுள்ளமை மிகவும் வருத்தத்திற்குரியது.
யாழ்ப்பாணத்தில், சொக்லெட் ஒன்றினை எடுத்து சாப்பிட்டதற்காக 10 வயது சிறுமியை கட்டி வைத்து அடித்து, துன்புறுத்தி, அந்தச் சிறுமியை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டியதும் இதே தமிழர் சமூகம் தான் என்பதை எண்ணிப் பார்க்க முடிகின்றதா.
முல்லைத்தீவில், ஆட்டைக் கடித்ததற்காக நாயொன்றை தூக்கிலிட்டு மகிழ்ந்ததும் இதே தமிழர் சமூகம் தான் என்பதை எண்ணிப் பார்க்க முடிகின்றதா.
மௌனம் காக்கும் தமிழர் சமூகம்
எத்தனை பாலியல் அத்துமீறல்கள், எத்தனை வழிப்பறிகள், எத்தனை சமுதாய சீர்கேடுகள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்று முழுதாக நேர்மறையான மாற்றத்தை இதே தமிழர் சமூகம் இன்று அடைந்துள்ளது என்பதுடன், இது எதிர்கால தலைமுறையினரையும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுவிடுமோ என்ற வருத்தத்தை சமூக நலன்விரும்பிகளிடையே தோற்றுவித்துள்ளது.
தனது மனைவியை தவறாக பேசியதற்காக, ஒரு பெண்ணுக்கு இத்தனைப் பெரிய தண்டனைகளை வழங்க முடியுமென்றால், அதுவும் கதறித் துடிக்கும் போதும் கூட கொடூரமாக தாக்க முடிகின்றதென்றால், கடந்த காலங்களில் உயரிய சபைகளில் தமிழ் பெண்களை மிகவும் இழிவாக ஒரு எம்.பி விமர்சிக்கும் போது, தனது சமூக வலைத்தளங்களில் பெண்களை மிகவும் இழிவாக அவர் விமர்சிக்கும் போது ஏன் மௌனமாக வாய்மூடி இருந்தது இந்த சமூகம்...
தவறாக பேசியதற்காக அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நியாயமானதென்றால், ஏன் அந்த எம்.பிக்கும் அவர் சார்ந்த நபர்களுக்கும் எதிராக ஒரு கோஷத்தைக் கூட எழுப்பவில்லை. மாறாக வசைபாடலில் அல்லவா ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்..
மிகப்பெரிய உயரிய தேசத்தைக் கட்டியெழுப்ப கனவு கண்ட உன்னத ஆன்மாக்களின் தியாகத்தை இன்று இந்த தமிழ் சமூகம் கண்ணெதிரே குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை..
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 03 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
