பாரிய பின்னடைவை சந்தித்துள்ள அதானி குழுமம்: சுமார் 80,000 கோடி இழப்பு
ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி பங்குச் சந்தை மற்றும் கணக்குகளை மோசடி செய்ததாக அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
பங்கு விலை அதிகரிப்பு
இந்த அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கௌதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்பு மற்றும் அவரது நிகர மதிப்பு சுமார் 120 பில்லியன் டொலர் வரை உயர்ந்ததுள்ளது.
மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 819 சதவீதம் அதிக லாபம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இது குறித்து அதானி குழுமம் கூறும்போது,அதானி எண்டர்பிரைசஸ் எப்.பி.ஓ(FPO) வை சேதப்படுத்தும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் கூறப்படும் விடயங்கள் தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
குறித்த அறிக்கையின் மூலம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 80,000 கோடிக்கு மேல் இழந்து, 119 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் 120 பில்லியன் டொலருக்கும் அதிகமான சொத்துமதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையை வெளியிட்ட,நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)