உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்! அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்யுமாறு எச்சரிக்கை
இலங்கையின் தற்போதைய மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர், இரைப்பையழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இதேபோல், அறிகுறிகளற்ற கொழுப்பு கல்லீரல் இன்று ஒரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
இன்று (29) நடைபெற்ற சுகாதார மேம்பாட்டு ஊடக மாநாட்டில் இரைப்பையழற்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் குறித்து உரையாற்றிய போதே வைத்தியர்கள் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.
இரைப்பையழற்சி ஒரு சாதாரண நோயா அல்லது தீவிர எச்சரிக்கையா
வயிற்றின் உள் அடுக்கில் ஏற்படும் இரைப்பையழற்சி இன்று ஒரு பொதுவான நிலையாக உள்ளதாக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் வயிறு, குடல் மற்றும் கல்லீரல் நோய்கள் நிபுணரான வைத்தியர் தனுஷி அபேநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முக்கிய அறிகுறிகள்
இதன் முக்கிய அறிகுறிகளாக, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் சிறிதளவு உணவிலேயே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஆகும். இந்த நிலைக்கு முக்கிய காரணம் பக்டீரியாவாகும்.
இவற்றுடன், நீண்டகால வலி நிவாரணி பயன்பாடு, மோசமான உணவு (அதிகப்படியான எண்ணெய் மற்றும் மிளகாய்), மன அழுத்தம் மற்றும் மது அருந்துதல்/புகைப்பிடித்தல் ஆகியவையும் காரணங்களாகும்.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடல் எடை குறைதல், இரத்த வாந்தி அல்லது கருப்பு நிற மலம் கழித்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக எண்டோஸ்கோபி பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஏனெனில் இவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நோய் மது அருந்துபவர்கள் மற்றும் மது அருந்தாதவர்கள் என இருவருக்கும் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.
இதற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது கல்லீரல் இழைநார் நோயாக (cirrhosis of liver) முற்றி, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
கட்டுப்படுத்தும் நடவடிக்கை
எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல் மற்றும் உடல் எடையைக் கட்டுப்படுத்துதல்.
எண்ணெய், சர்க்கரை மற்றும் மிளகாய் அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்தல். சீரான இடைவெளியில் பல சிறிய வேளை உணவுகளை உண்ணுதல் என்பனவற்றின் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.
மேலும், இரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள் மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்.
இந்த நிலைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சரியான சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், முழுமையாகக் குணமடையவும், கடுமையான சிக்கல்களைத் தடுக்கவும் முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.
இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri