விசுவமடுவில் மஞ்சள் நிற எரிவாயு பயன்பாட்டாளரின் அடுப்பு வெடிப்பு! (Photos)
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் மஞ்சள் நிற எரிவாயுவினை பயன்படுத்தியவரின் எரிவாயு அடுப்பு ஒன்று நேற்று இரவு சமையல் செய்துகொண்டிருக்கும் போது வெடித்துள்ளது.
குறித்த எரிவாயு சிலிண்டர் எடுத்து பத்து நாட்களே ஆன நிலையில் அடுப்பு, வெடித்து சிதறியுள்ளது.
ஏற்கனவே, நீலநிற காஸ்சிலிண்டர் பாவனையாளர்களின் அடுப்பு வெடித்துள்ள நிலையில், தற்போது மஞ்சள் நிற காஸ்சிலிண்டர் பாவனையாளர்களின் அடுப்பும் வெடித்துள்ளது.
காஸ் அடுப்பு வெடித்துள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிசார் வந்து பார்வையிட்டு பதிவு செய்துள்ளதாகவும்,
எரிவாயு வாங்கிய கடைக்கு தெரியப்படுத்தி சம்மந்தப்பட்ட
முகவர் நிறுவனத்திற்கும் அறிவித்து அவர்களும் வந்து பார்வையிட்டுள்ளதாக
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.








கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
