யாழ்.தென்மராட்சியில் இரு பகுதிகளில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்புக்கள்
யாழ்ப்பாணம் - சாவகச்சோி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்வயல் மற்றும் கொடிகாமத்தில் எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
கல்வயல் பகுதியில் நேற்று பாடசாலைக்குப் புறப்படுவதற்காக ஆசிரியர் ஒருவர் சமையலில் ஈடுபட்டுக் கொண்டு தானும் தயாராகிக் கொண்டிருந்த போது அடுப்பு வெடித்துள்ளது.
இதன்போது ஏற்பட்ட தீ சுவாலையை அவதானித்ததும் வெளியே வைக்கப்பட்டிருந்த சிலிண்டருடனான இணைப்பை உடனடியாக துண்டித்ததால் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கொடிகாமம் - தவசிகுளம் பகுதியிலும் நேற்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமையல் எரிவாயு அடுப்பில் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது திடீரென குறித்து அடுப்பு வெடித்தது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam