யாழ். வட்டுக்கோட்டையில் மேலும் இரண்டு எரிவாயு அடிப்புக்கள் வெடித்து சிதறின! (Video)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவில் உள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும் 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் வெடித்துச் சிதறியுள்ளன.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டினரால் இன்று (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரின் இரண்டு குழுக்கள் குறித்த வீட்டிற்கு சென்று அடுப்பினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே எரிவாயு அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியதாகவும் எனினும் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் சம்பவம் நிகழ்ந்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் - கஜி
முதலாம் இணைப்பு
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது.
எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, சுன்னாகம், கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
