மட்டக்களப்பிலும் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு (VIDEO)
மட்டக்களப்பு - திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
தேனிர் வைப்பதற்காக இன்று காலை 10 மணியளவில் எரிவாயு அடுப்பினை செயல்படுத்தியதன் பின்னர் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து உறவினர்களிடம் கதைத்துக் கொண்டிருந்த வேளை அவர்களது சமையலறையில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டதை உணர்ந்து அங்கு போய் பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு வெடித்து சிறதியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாருக்கும் சுவிஸ் கிராம
கிராம சேவகர் அலுவலர்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri