சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு சீர்செய்யப்படும் - லிற்றோ நிறுவனம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தற்காலிகத் தட்டுப்பாடு விரைவில் சீர்செய்யப்படும் என்று லிற்றோ எாிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
எாிவாயு கொள்கலன்களை ஏற்றிய கப்பல் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்துக்கு வந்து விட்டது.
எனினும் துறைமுகத்தில் இருந்து சந்தைப்படுத்தலுக்கான விநியோகத்தில் ஏற்பட்ட தாமதமே, எாிவாயுவின் தற்காலிக தட்டுப்பாட்டுக்கான காரணம் என்று லிற்றோ எாிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
