வவுனியாவில் எரிவாயு தட்டுப்பாட்டினால் வெதுப்பகங்கள் சிலவற்றுக்கு பூட்டு (Photos)
வவுனியாவில் இயங்கி வருகின்ற வெதுப்பகங்கள் சில எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், இதனால் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக வவுனியா நகரின் குட்செட் வீதி மற்றும் பட்டானிச்சூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்ற இரண்டு வெதுப்பகங்கள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.
இதனால் வாடிக்கையாளர்கள் உட்படத் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு தட்டுப்பாடு நீங்கிவிட்டதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற போதும் எரிவாயு விநியோக நிலையங்களில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால்
மக்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
வெதுப்பகங்களில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் வெதுப்பகங்களை மூடவேண்டிய நிலை
உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam